நடுக்கடலில் தத்தளித்த கர்நாடக மீனவர்களை காப்பாற்றிய தமிழக மீனவர்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடுக்கடலில் தத்தளித்த கர்நாடக மீனவர்களை காப்பாற்றிய தமிழக மீனவர்கள்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டத்தை சேர்ந்த 20 மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராமல் படகில் இருந்த பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டு படகில் தீப்பற்றிக் கொண்டது. தீ டீசல் டேங்கில் பற்றியதால் டேங்க் வெடித்து படகில் இருந்த மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.

எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவம் மீனவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. என்ன செய்வது என்று புரியாமல் தத்தளித்தனர்.

இந்த தீவிபத்தில் படகில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். 7 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.படகில் இருந்த மீனவர்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தபோது அந்த வழியே சென்று கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த மீனவ படகு ஒன்று தீ விபத்துக்குள்ளான படகு அருகே சென்று அதில் சிக்கியிருந்த மீனவர்களை காப்பாற்றினர். தக்க சமயத்தில் அவர்களை காப்பாற்றிய மீனவர்கள் காயமடைந்தவர்களை துறைமுகத்திற்கு அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ள 7 பேரில் 3 மீனவர்களின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை