ஆலப்புழா அருகே ஆம்புலன்சில் தீ பிடித்து நோயாளி பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆலப்புழா அருகே ஆம்புலன்சில் தீ பிடித்து நோயாளி பலி

திருவனந்தபுரம்: ஆலப்புழா அருகே ஆம்புலன்சில் ஏற்பட்ட தீயால் நோயாளி ஒருவர் இறந்தார். நர்ஸ் படுகாயம் அடைந்தார்.

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே நெடுமுடி பகுதியை சேர்ந்தவர் ேமாகனன் நாயர் (55). மூச்சுதிணறல் பிரச்னைக்காக அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நேற்று மாலை அவரது உடல் நிலை மேலும் மோசமானது. இதையடுத்து அவரை ஆலப்புழா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக அவரை ஆம்புலன்சில் ஏற்றினர்.

அப்போது ஆம்புலன்சில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டரில் திடீரென தீ பிடித்தது.

தீ வேகமாக பரவியதால் மோகனன் நாயருக்கு மூச்சுதிணறல் அதிகமானது. உடனடியாக அவரை வேறு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

செல்லும் வழியில் அவர் இறந்தார். இதற்கிடையே ஆம்புலன்ஸ் முற்றிலும் எரிந்து நாசமானது.

ஆம்புலன்சில் இருந்த நர்ஸ் பலத்த தீ காயம் அடைந்தார்.

அவர் ஆலப்புழா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

.

மூலக்கதை