கேரளாவில் பெண் தலைவர் பலாத்காரம்: எம்எல்ஏ மீது தேசிய மகளிர் ஆணையம் விரைவில் வழக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரளாவில் பெண் தலைவர் பலாத்காரம்: எம்எல்ஏ மீது தேசிய மகளிர் ஆணையம் விரைவில் வழக்கு

திருவனந்தபுரம்: கேரளாவில் டிஒய்எப்ஐ பெண் தலைவரை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட வழக்கில் எம்எல்ஏ சசி மீது தேசிய மகளிர் ஆணையம் வழக்கு பதிவு செய்ய தீர்மானித்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சொரணூர் ெதாகுதி சிபிஎம் எம்எல்ஏவாக இருப்பவர் பி. கே. சசி.

இவர் தன்னை பலாத்காரம் செய்ததாக அந்த பகுதியை சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவரான இளம்பெண் ஒருவர் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக அந்த பெண் சிபிஎம் அகில இந்திய செயலாளரிடம் புகார் அளித்தார்.

இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளம் பெண்ைண பலாத்காரம் செய்த எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜ, காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதுகுறித்து கேரள சிபிஎம் மாநில செயலாளர் ேகாடேரி பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘எம்எல்ஏ சசி மீது போலீசில் புகார் தெரிவிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்டவர் கட்சியில் தான் புகார் கொடுத்துள்ளார்.

கட்சி விசாரித்து நடவடிக்ைக எடுக்கும்’’ என்றார். இதுதொடர்பாக கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ்சென்னித்தலா கூறுகையில், ‘‘எம்எல்ஏ சசி மீது உடனடியாக வழக்குபதிவு ெசய்ய வேண்டும்.

எதிர்கட்சியை சேர்ந்த சிலர் மீது புகார் வரும்போது உடனடியாக போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். ஆனால் ஆளும் கட்சி மீது புகார் வரும்போது கட்சி விசாரிக்கும் என கூறுவது ஏற்கத்தக்கதல்ல.

இதுதொடர்பாக மாநில மகளிர் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது’’ என்றார்.  

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் எம்எல்ஏ சசி மீது வழக்கு பதிவு செய்ய தீர்மானித்துள்ளது.

தேசிய பெண்கள் ஆணைய தலைவி ரேகாசர்மா விரைவில் கேரளா வர உள்ளார். அவர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்த பின்னர் எம்எல்ஏ சசி மீது வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கேரள மாநில மகளிர் ஆணைய தலைவி ஜோசபின் கூறுகையில், ‘‘எம்எல்ஏ சசி மீது மகளிர் ஆணையத்தில் இதுவரை எந்த புகாரும் வரவில்லை. புகார் வந்தால் மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும்.

சுயமாக மகளிர் ஆணையத்தால் வழக்கு பதிவு செய்ய முடியாது’’ என்றார்.

.

மூலக்கதை