கேரளாவுக்கு அரசு பஸ்சில் கடத்திய 23.5 லட்சம் பறிமுதல்: 2 பேர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரளாவுக்கு அரசு பஸ்சில் கடத்திய 23.5 லட்சம் பறிமுதல்: 2 பேர் கைது

நாகர்கோவில்: உரிய ஆவணங்கள் இல்லாமல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்சில் கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ. 23. 5 லட்சத்தை களியக்காவிளை அருகே கலால்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்சில் பணம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து களியக்காவிளை அருகே உள்ள அமரவிளை சோதனை சாவடியில் கலால்துறை அதிகாரிகள் பஸ்சை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது பஸ்சில் சந்தேகத்திற்கு இடமான வகையில் அமர்ந்திருந்த திருச்சியை சேர்ந்த ஞானசேகர்(25), திண்டுக்கல் முகன்(45) ஆகியோரிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 23. 5 லட்சம் பணம் இரண்டு பைகளில் வைத்திருந்தது தெரியவந்தது.

திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகருக்கு பணம் கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டாலும் அதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் கைவசம் இல்லை.

மேலும் அவர்கள் இருவரும் இதற்கு முன்னரும் இதனை போன்று பணம் முக்கிய பிரமுகருக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ. 23. 5 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் இருவரையும் கலால்துறையினர் அமலாக்கபிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

.

மூலக்கதை