சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா

PARIS TAMIL  PARIS TAMIL
சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா

 சமந்தா திருமணத்துக்கு பின்னும் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் சீமராஜா, யு டர்ன் என்று 2 படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.

 
சீமராஜா படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறும்போது, “சிவகார்த்திகேயன், சூரி ரெண்டுபேரும் செட்ல எதையாவது சொல்லி சிரிக்க வெச்சுக்கிட்டே இருப்பாங்க. அவங்களை பார்க்கும்போது காமெடி சேனல்தான் ஞாபகத்துக்கு வரும். வீட்ல இவங்களை எப்படித்தான் வெச்சுக்கிட்டு இருக்காங்களோனு நினைச்சு சிரிப்பேன்.
 
 
 
சிவகார்த்திகேயனோட ரியாலிட்டி ஷோக்களை நான் பார்த்தது கிடையாது. அந்த காமெடி நிகழ்ச்சிகள்ல எந்த வேலை பண்ணிக்கிட்டு இருப்பாரோ, அதே வேலையைத் தான் செட்டுல பார்த்துட்டு இருப்பார். அதாவது, சரமாரியா காமெடி சொல்லி சிரிக்க வைப்பார். சிவகார்த்திகேயன் ஒரு நல்ல ஸ்ட்ரெஸ் பஸ்டர்!” என்று கூறி உள்ளார்.

மூலக்கதை