சிற்றுண்டியால் மேலும் 30 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலை...!!

PARIS TAMIL  PARIS TAMIL
சிற்றுண்டியால் மேலும் 30 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலை...!!

 Kellogg நிறுவனத்தின் Honey Smacks காலை சிற்றுண்டியை உட்கொண்டவர்களில் மேலும் 30 பேர் நோய்வாய்ப்பட்டிருப்பதாக, அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

 
அந்த உணவில் சல்மோனெல்லா (Salmonella) எனும் நச்சு கலந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
 
அமெரிக்காவின் 36 மாநிலங்களில் அந்த உணவை உட்கொண்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 130ஆக அதிகரித்துள்ளது.
 
இதுவரை 34 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
இதுவரை எவரும் மாண்டதாகத் தகவல் இல்லை. 
 
இவ்வாண்டு ஜூன் மாதம், அமெரிக்காவின் 30க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து 1.3 மில்லியன் Honey Smacks உணவுப் பொட்டலங்களை மீட்டுக் கொள்ள Kellog நிறுவனம் முடிவெடுத்தது. அந்த உணவில் சல்மோனெல்லா நச்சு கலந்திருக்கலாம் என்ற அச்சத்தின் பேரில், அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 
ஆனால், நச்சு கலந்த அந்த உணவுப்பொருள், இன்னும் சில பகுதிகளில் விற்கப்பட்டு வருவதாக, அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகத் துறை கூறியதாக, அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு நிலையம் தெரிவித்தது.
 
அந்தப் பிரச்சனையால் மக்கள் நோய்வாய்ப்படும் போக்கு, இவ்வாண்டு மார்ச் மாதமே தொடங்கிவிட்டதாகவும், அது குறித்த விசாரணை தொடர்ந்து வருவதாகவும் நிலையம் கூறியது.  
 

மூலக்கதை