இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் தோல்விக்கு அஸ்வின்தான் காரணம்: ஹர்பஜன் சிங் பகீர் புகார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் தோல்விக்கு அஸ்வின்தான் காரணம்: ஹர்பஜன் சிங் பகீர் புகார்

மும்பை: இங்கிலாந்து அணியுடனான 4  டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு அஸ்வின் தனது பங்களிப்பை சரியாக செய்யாததே காரணம் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு அஸ்வின் சரியாக விளையாடாததே காரணம் என ஹர்பஜன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது: சவுத்தாம்ப்டன் ஆடுகளம் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு அதிக அளவில் ஒத்துழைப்பு கொடுத்தது. குறிப்பிட்ட கரடு முரடான பகுதியில் பந்தை பிட்ச் செய்தால் ஏராளமான விக்கெட்டுக்களை அறுவடை செய்திருக்க முடியும்.

அதை மொயீன் அலி சரியாக செய்தார். அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

4-வது டெஸ்டில் இந்தியா தோல்வியை சந்தித்ததற்கு முக்கிய காரணம் அஸ்வினை விட மொயீன் அலி சிறப்பாக பந்து வீசியதுதான். முதல் முறையாக இந்திய சுழற்பந்து வீச்சாளரை விட, இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக பந்து வீசியதை நான் பார்த்தேன்.

அஸ்வினால் விக்கெட் வீழ்த்த இயலாததே இந்தியா 1-3 எனத் தொடரை இழக்க முக்கிய காரணம்.

அஸ்வினின் காயம் எவ்வளவு சீரியஸானது என்று எனக்குத் தெரியாது.

அது எவ்வளவு முக்கியமானது என்று அணி நிர்வாகத்திற்கு கட்டாயம் தெரிந்திருக்கும். அவரிடம் எதிர்பார்த்ததை வெளிப்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி 7ம் தேதி லண்டனின் ஓவல் மைதானத்தில் துவங்க உள்ளது.

.

மூலக்கதை