டேட்டிங்கில் கவனம் செலுத்தும் பயிற்சியாளர் கொந்தளிக்கும் வீரர்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டேட்டிங்கில் கவனம் செலுத்தும் பயிற்சியாளர் கொந்தளிக்கும் வீரர்கள்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் பிரபல பாலிவுட் நடிகை நிம்ரத் கவுரும் அடிக்கடி டேட்டிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் கிரிக்கெட் போட்டிகளில் ரவி சாஸ்திரியின் கவனம் சிதறி வருவதாக   பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது. கிரிக்கெட்டிற்கும் சினிமாவிற்கும் இடையேயான திருமண உறவு பிரிக்க முடியாதது போல. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியுடன் நடிகை நக்மா இணைத்து பேசப்பட்ட காலமும் உண்டு.

அதன்பிறகு முன்னாள் கேப்டன் தோனிக்கும் நடிகை ராய் லட்சுமிக்கும் காதல் என பேசப்பட்டது. கங்குலி நக்மாவுடனும், தோனி ராய் லட்சுமியுடனும் டேட்டிங் செய்தனர் என ஆதாரங்களுடன் புகைப்படங்கள் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை  உண்டாக்கியது.

அண்மையில் கேஎல் ராகுல், நடிகை நிதி அகர்வாலுடன் வெளியே சென்ற புகைப்படம் வைரலானது.

 ஆனால் அவர்கள் இருவரும் சிறுவயது நண்பர்கள் என விளக்கமளித்தனர்.   இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் நிம்ரத் கவுர் ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக டேட்டிங் செய்துவருவதாகவும் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிசியான கிரிக்கெட் போட்டிகள் கொண்ட கால அட்டவணைகளுக்கு இடையே போட்டிகளில் கவனம் செலுத்தாமல் டேட்டிங் செய்வதிலே குறியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரவி சாஸ்திரிக்கு இந்திய அணியில் கடுமையான கண்டன குரல் எழுந்துள்ளது.

இந்தியா தற்போது இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தது. இதற்கு வீரர்களின் சொதப்பலான ஆட்டம் காரணம் என்றாலும் பயிற்சியாளரின் பங்கும் அதிகமானது.

கிரிக்கெட் வீரர்களின் பேட்டிங்கை  விட டேட்டிங்தான் முக்கியம் என்றால் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிக் கொண்டு அவர் யாருடன் வேண்டுமானாலும்டேட்டிங்கை தொடரலாம் என கருத்து  தெரிவித்துள்ளனர். ஆனால் நடிகை நிம்ரத் கவூர் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கம் மூலம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.


.

மூலக்கதை