டெல்லி ரஞ்சி அணிக்கு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் லான்ஸ் க்ளுஸ்னர் நியமனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லி ரஞ்சி அணிக்கு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் லான்ஸ் க்ளுஸ்னர் நியமனம்

புதுடெல்லி :  டெல்லி கிரிக்கெட் அமைப்பு  டெல்லி ரஞ்சி அணிக்கு ஆலோசகராக தென்னாப் பிரிக்காவின் லான்ஸ் க்ளுஸ் னரை நியமித்துள்ளது. இது உள்ளூர் கிரிக்கெட்டில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

லான்ஸ் க்ளுஸ்னர் டெல்லி அணியின் ஒருநாள் தொடர்கள் மற்றும் டி20 போட்டிகளில் ஆலோசகராக செயல்படுவார் என்று டெல்லி கிரிக்கெட் அமைப்பு தெரிவித்துள்ளது. அதே சமயம், டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் மிதுன் மன்ஹாஸ் தொடர்ந்து செயல்படுவார்.

அவருக்கு உறுதுணையாகவே லான்ஸ் க்ளுஸ்னர் இருப்பார் என கூறியுள்ளது டெல்லி கிரிக்கெட் அமைப்பு லான்ஸ் க்ளுஸ்னர் தென்னாப்பிரிக்காவின் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் ஆவார்.

 சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வந்த இவர்  இதுவரை தென்னப்பிரிகாவுக்காக 171 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.   இதுவரை 3576 ரன்கள் மற்றும் 192 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

49 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 19௦6 ரன்கள் மற்றும் 80 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். 1999 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆட்டநாயகன் விருது வாங்கியவர் லான்ஸ் க்ளுஸ்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது  நியமனத்தை டெல்லி வீரர்கள் வரவேற்றுள்ளனர்.

.

மூலக்கதை