ஒவியா பெயரில் மற்றுமொரு படம்

PARIS TAMIL  PARIS TAMIL
ஒவியா பெயரில் மற்றுமொரு படம்

 சாதாரண நடிகையாக இருந்த ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமான நடிகை ஆனார். அவர் நடித்து முடித்துள்ள சீனி என்ற படம் ஓவியாவை விட்டா யாரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்தப்படம் ரிலீஸாக உள்ள நிலையில், தற்போது ஓவியா என்ற பெயரிலேயே ஒரு படம் தயாராகி வருகிறது.

 
கனடாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமாகிய இமாலயன் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து, நடிக்கும் படம். புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் இயக்க, பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.
 
கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ஓவியாவாக நடிக்கிறார். "அனைத்து வயதினரையும் கவரும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. "ஓவியா என்ற குழந்தையை சுற்றி நடக்கிற கதை. மற்றபடி நடிகை ஓவியாவுக்கும் படத்திற்கும் சம்பந்தமில்லை" என்கிறார் இயக்குனர் கஜன் சண்முகநாதன்.
 

மூலக்கதை