மேட்டூர், தாய்த் தமிழ்ப் பள்ளியின் நிறுவனர் திரு. தமிழ்க் குரிசில் (Tamilkkuricil ) அவர்களின் இழப்பிற்கு வலைத்தமிழ் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
மேட்டூர், தாய்த் தமிழ்ப் பள்ளியின் நிறுவனர் திரு. தமிழ்க் குரிசில் (Tamilkkuricil ) அவர்களின் இழப்பிற்கு வலைத்தமிழ் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது..

அவர்களின் இழப்பிற்கு 

மேட்டூர், தாய்த் தமிழ்ப் பள்ளியின்  நிறுவனர் திரு. தமிழ்க் குரிசில் (Tamilkkuricil ) அவர்கள் இன்று இரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் ..  தாய்த்தமிழ் கல்விப் பணியின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் முக்கிய நேரத்தில் இவரது மரணம் தாய்த்தமிழ் பள்ளிகளுக்கும், தமிழ்வழிக் கல்வி முன்னெடுப்பிற்கும் பேரிழப்பு. மேட்டூர் தாய்த்தமிழ் பள்ளியை நடத்திவருவதுடன், தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்த்தமிழ் பள்ளிகளுக்குமான "தாய்த்தமிழ் கல்விப் பணி" என்கிற கூட்டமைப்பின் செயலாளராக இருந்து கொண்டு செயல்பட்டுவந்தார்.   அரசு உதவி எதுவும் தாய்த் தமிழ் பள்ளிகளுக்கு இல்லாத நிலையில் பல்வேறு உதவிகளைப் பெறுவதற்கு பலகட்ட முயற்சிகளை சோர்வடையாமல் எடுத்துவந்தவர்.  இப்படி இவர் எடுத்த முயற்சியியின் விளைவாகத்தான் தாய்த்தமிழ் பள்ளிகளுக்கு அரசின் இலவசப்பாடப்புத்தகங்கள் கிடைக்கின்றன. தாய்த்தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்கு கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு பணிகளை தொய்வின்றி முன்னெடுத்தவர்.  இரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.  இவரை இழந்து வாடும் தாய்த்த்தமிழ் கல்வி வட்டத்திற்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.. இவரது ஆன்மா இறையருளில் கலக்க பிரார்த்திப்போம் ..  -சங்கர் 

மேட்டூர், தாய்த் தமிழ்ப் பள்ளியின்  நிறுவனர் திரு. தமிழ்க் குரிசில் (Tamilkkuricil) அவர்கள் இன்று இரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் .. 


தாய்த்தமிழ் கல்விப் பணியின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் முக்கிய நேரத்தில் இவரது மரணம் தாய்த்தமிழ் பள்ளிகளுக்கும், தமிழ்வழிக் கல்வி முன்னெடுப்பிற்கும் பேரிழப்பு. மேட்டூர் தாய்த்தமிழ் பள்ளியை நடத்திவருவதுடன், தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்த்தமிழ் பள்ளிகளுக்குமான "தாய்த்தமிழ் கல்விப் பணி" என்கிற கூட்டமைப்பின் செயலாளராக இருந்து கொண்டு செயல்பட்டுவந்தார். 


அரசு உதவி எதுவும் தாய்த் தமிழ் பள்ளிகளுக்கு இல்லாத நிலையில் பல்வேறு உதவிகளைப் பெறுவதற்கு பலகட்ட முயற்சிகளை சோர்வடையாமல் எடுத்துவந்தவர். இப்படி இவர் எடுத்த முயற்சியியின் விளைவாகத்தான் தாய்த்தமிழ் பள்ளிகளுக்கு அரசின் இலவசப்பாடப்புத்தகங்கள் கிடைக்கின்றன. தாய்த்தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்கு கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு பணிகளை தொய்வின்றி முன்னெடுத்தவர். 


இரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவித்தனர். 


இவரை இழந்து வாடும் தாய்த்த்தமிழ் கல்வி வட்டத்திற்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்..

இவரது ஆன்மா இறையருளில் கலக்க பிரார்த்திப்போம் .. 

மூலக்கதை