ஆஸ்திரேலிய அணியை பதறவிட்ட பந்து வீச்சாளர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸ்திரேலிய அணியை பதறவிட்ட பந்து வீச்சாளர்

பெங்களூரூ: ஆஸ்திரேலிய ஏ அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ், ஒரே இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்துள்ளார். இந்தியா ஏ, ஆஸ்திரேலியா ஏ அணிகள் பங்கேற்கும் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.

நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி  பேட்டிங்கைத் தேர்வு செய்தது. உஸ்மான் கவாஜா, குர்திஸ் பேட்டர்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தனர்.

அப்போதுதான் சிராஜ் தனது விக்கெட் வேட்டையைத் தொடங்கினார். அவரது வேகத்தில் பேட்டர்சன், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹான்ட்ஸ்காம்ப், மிட்செல் மார்ஷ் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.பின்னர் கவாஜா, லாபுஸ்சாக்னேவுடன் இணைந்து மீண்டும் பாட்னர்ஷிப்பை தொடர ஆரம்பித்தார். இந்த ஜோடி 114 ரன்களை சேர்த்த நிலையில், லாபுஸ்சாக்னே 60 ரன்கள் சேர்த்து சிராஜிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

இதற்கிடையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து கழட்டிவிடப்பட்டு, இந்தப் போட்டியில் ஆடிவரும் குல்தீப் யாதவ் அவர் பங்குக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் ஆஸ்திரேலியா 243 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

முகமது சிராஜ், 59 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த நிலையில் சிராஜ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.  

.

மூலக்கதை