ஷூ வாங்க பணம் இல்லை; உதவிக்கு யாருமில்லை நிஜமான தடைகளை உடைத்தெறிந்த தடகள வீரர்: நெகிழ்ச்சியில் தமிழக ‘வெள்ளி’ மகன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஷூ வாங்க பணம் இல்லை; உதவிக்கு யாருமில்லை நிஜமான தடைகளை உடைத்தெறிந்த தடகள வீரர்: நெகிழ்ச்சியில் தமிழக ‘வெள்ளி’ மகன்

ஜகார்தா:  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் தடை தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வாங்கிய  தருண் அய்யாசாமி, திருப்பூர் மாவட்டம்  ராவுத்தம்பாளையம்  என்ற  கிராமத்தை  சேர்ந்தவர். தன்னோட விளையாட்டுத் திறமையினால் இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்தவரது  உண்மையான பின்னணி அதிர வைக்கிறது.   தடை தாண்டுதல் விளையாட்டைப் போலவே வாழ்க்கையிலேயும் பல தடைகளைத் தாண்டி வந்திருக்கிறார்.
தருணுக்கு 7  வயது இருக்கும்போதே அவரது தந்தை மஞ்சள் காமாலை பாதிப்பில் இறந்துவிட்டார்.

அவருக்கு சத்யா என்கிற தங்கை இருக்கிறார். இந்த நிலையில் விளையாடாமல் ஒழுங்காக படித்து குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என பலர் அட்வைஸ் செய்தனர்.ஆனால் தருண் விளையாட்டில் குறியாக இருந்தார். அவரது அம்மா பூங்கொடி, அவரோட விளையாட்டுக்கு எந்தத் தடையும் போடாமல்  ஊக்குவித்துள்ளார்.


இது குறித்து அருண் நிருபர்களிடம் கூறியதாவது:  என் அம்மா எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். குறிப்பாக உன் திறமை மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.

உன்னை உன் திறமைதான் உயர்த்தும். முழு நம்பிக்கையோட பிராக்டீஸ் பண்ணுப்பா என ஊக்கமளித்தார்.

எனக்குப் பல தடைகள், சோதனைகள்னு வந்தப்போ என்னோட விளையாட்டுதான் அதை எதிர்கொள்வதற்கான வலிமையைக் கொடுத்தது.   விளையாட வந்த புதிதில் ஒரு ஜோடி ஸ்போர்ட்ஸ் ஷூ கூட வாங்க முடியாம ஓடிக்கிட்டு இருந்தவன் நான்  இப்போ எனக்கான உதவிகள் அனைத்தும் அரசு செய்வதாக கூறியுள்ளது.   விளையாடுங்க  விளையாட்டுல ஜெயிக்கலைன்னாலும், வாழ்க்கையில அது நம்மை ஜெயிக்க வெச்சிடும். நாம முன்னாடி பார்த்த மாதிரி, விளையாடுவதற்குப் பொருட்கள் தேவையில்லை.

திறமையும் ஆர்வமும் முயற்சியும் போதும்.   இவ்வாறு தருண் கூறிஉள்ளார்.


.

மூலக்கதை