இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது இந்தியா: வீரர்கள் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது இந்தியா: வீரர்கள் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தி

சவுத்தாம்ப்டன்:  இந்தியாவிற்கு எதிரான 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், 60 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து  அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து சென்ற கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டியில் வெற்றியும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற நான்காவது போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 273 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஷிகர் தவான், ராகுல், புஜாரா ரன் எடுக்க முடியாமல் திணறினர்.

விராட் கோலி 58 ரன்களும், ரஹானே 51 ரன்களும் எடுத்து அணியின் சரிவைத் தடுத்து நிறுத்த முயன்றனர். அதன்பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

மொயின் அலி அபாரமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஐந்து  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.   இந்த நிலையில் இந்திய வீரர்கள் மீது கிரிக்கெட் ரசிகர்கள்  மற்றும் ஆர்வலர்கள் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

.

மூலக்கதை