தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து...!!

PARIS TAMIL  PARIS TAMIL
தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து...!!

இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டில் 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி   தொடரை கைப்பற்றியுள்ளது.
 
சௌத்தாம்டனில் இடம்பெற்ற நான்காவது டெஸ்டில் வெற்றி பெறுவதற்கு 245 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 184 ஓட்டங்களுக்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து தொடரை பறிகொடுத்தது.
 
இந்திய அணிசார்பில் விராட்கோலியும் ரகானேயும் அரைசதங்களை பெற்றபோதிலும் ஏனைய வீரர்கள் சோபிக்காததால் அணி தோல்வியை தழுவியது.
 
விராட்கோலி 58 ஓட்டங்களையும் ரகானே 51 ஓட்டங்களையும் பெற்ற அதேவேளை அஸ்வின் இறுதிநேரத்தில் சிறப்பாக விளையாடி 25 ஓட்டங்களை பெற்றார்.
 
இங்கிலாந்து அணிக்காக மீண்டும் சிறப்பாக பந்து வீசிய மொயீன் அலி நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். 
 
இந்த டெஸ்டில் அவர் ஒன்பது விக்கெட்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை இந்த வெற்றியின் மூலம் மூன்று டெஸ்ட்களில் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
 

மூலக்கதை