நயன்தாராவை இயக்க ஆசைப்படும் ஸ்ரீபிரியா

PARIS TAMIL  PARIS TAMIL
நயன்தாராவை இயக்க ஆசைப்படும் ஸ்ரீபிரியா

 ஸ்ரீபிரியா, கமலின் மக்கள் நீதி மய்ய கட்சி பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் இருந்து...

 
நீங்கள் ஓர் இயக்குநராக யாரை வைத்துப் படமெடுக்க விரும்புவீர்கள்?
 
நயன்தாரா.
 
ரஜினிக்கும், கமலுக்கும் என்ன வித்தியாசம்?
 
கமல், எல்லோருடனும் சட்டெனப் பழகிவிடுவார். ரஜினி, ஒருவரைப்பற்றி நன்கு அறிந்த பின்னரே அவரை நண்பராக ஏற்பார். ஆனால், இருவருமே நட்புக்கு அதிக மரியாதை கொடுப்பவர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்கள். என்னிடம் முன்னர் பழகிய அதே நட்புடன் அவர்கள் இன்றுவரையிலும் இருப்பது எனக்கு மகிழ்ச்சி.
 
சினிமாவுக்கு வரவில்லை என்றால், ஸ்ரீபிரியா என்னவாகியிருப்பார்?
 
நான் சட்டம் படிக்க ஆசைப்பட்டேன். ஒரு வேளை, வழக்கறிஞராகி இருக்கலாம்.
 
சமீபத்தில் உங்களை கவர்ந்த நடிகர்கள்?
 
விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன். நடிப்பு மட்டுமல்ல, இயல்பிலும் இருவரும் அருமையானவர்கள்.
 
 
 
சமூக வலைதளங்களின் தாக்கம்?
 
சாதகம், பாதகம் இரண்டும் உள்ளன. தியேட்டரில் பாதி படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அதைப் பற்றிய விமர்சனத்தைப் பலரும் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்கிறார்கள். அந்தக் குழுவின் மொத்த உழைப்பையும் தங்களின் நேர்மையற்ற, முதிர்ச்சியற்ற விமர்சனத்தால் விரயமாக்குகிறார்கள். ஒரு படைப்பை விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். 

மூலக்கதை