விமானியை கரம் பிடித்தார் சுவாதி

PARIS TAMIL  PARIS TAMIL
விமானியை கரம் பிடித்தார் சுவாதி

 தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்தவர் நடிகை சுவாதி. அவர், சுப்பிரமணியபுரம் என்ற தமிழ் படத்தில் நடித்து பிரபலமானார். அவருக்கு, சமீப நாட்களாக எந்த மொழியிலும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.

இந்த சூழலில், அவர் மலேசியன் ஏர்லைன்சில் விமானியாக பணியாற்றி வந்த தன்னுடைய நண்பர் விகாசை காதலிக்கத் துவங்கினார். இந்தத் தகவல் வீட்டுக்குத் தெரிய வந்தது. பட வாய்ப்புகள் இல்லாத இந்த சூழலில், திருமணத்தை முடித்து விடலாம் என்று முடிவெடுத்த சுவாதி குடும்பத்தினர், விறுவிறுவென அதற்கான ஏற்பாடுகளை செய்து, கடந்த 30ல் ஐதராபாத்தில் வைத்து, திருமணத்தை நடத்தி முடித்து விட்டனர். தொடர்ந்து, செப்., 2ல், திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.

“திருமணம் செய்து கொண்டு, கட்டுக்கோப்பான குடும்பப் பெண்ணாகி விட்டாலும், சினிமா மீது இருக்கும் காதல் எனக்கு கொஞ்சமும் குறையவில்லை. சினிமாவில் நல்ல கதையம்சத்தோடு, நல்ல வாய்ப்புகளும் கிடைத்தால், சினிமாவை ஒரு நாளும் விட மாட்டேன். இந்த விஷயத்தில், எனது கணவரும் என் எண்ணத்துடனேயே இருக்கிறார்'' என்றார் சுவாதி.

 

மூலக்கதை