இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் டி20 போட்டி அட்டவணை அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் டி20 போட்டி அட்டவணை அறிவிப்பு

மும்பை: இந்தியா  மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்த ஒரு வாரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிகள்  இரண்டு டெஸ்டுகள், 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரினை  இந்தியாவுடன் ஆட இருக்கிறது.

அக்டோபர் 4ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் தொடங்கி  7  வாரங்கள் நடைபெற இருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ்  மற்றும் இந்திய அணிகள் 1948 முதல் 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் 30 வெற்றி பெற்றுள்ளது.

46 போட்டிகள் ட்ராவில் முடிந்துள்ளது.

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான டெஸ்ட் போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தது.
அதில்ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), சுனில் அம்பிரீஸ், தேவேந்திர பிஷூ, கிரைக் ப்ராத்வாட், ரோஸ்டன் சேஸ், ஷேன் டவுரிச், ஷானோன் கேப்ரியல், ஜஹார் ஹாமில்டன், சிம்ரோன் ஹெட்மியர், ஷை ஹோப், ஆல்ஜார்ரி ஜோசப், கீமோ பால், கியரன் பவல், கெமர் ரோச் மற்றும் ஜோமெல் வரிசன்.

முதல் டெஸ்ட்
அக்டோபர் 4-8, ராஜ்கோட்
இரண்டாவது டெஸ்ட்  
அக்டோபர் 12-16, ஹைதராபாத்
அட்டவணை
முதல் ஒரு நாள்:  
அக்டோபர் 21,
குவஹாத்தி
இரண்டாவது ஒரு நாள்:  
அக்டோபர் 24, இந்தூர்
மூன்றாவது ஒரு நாள்:  
அக்டோபர் 27, புனே
நான்காவது ஒரு நாள்:
 அக்டோபர் 29, மும்பை
ஐந்தாவது ஒருநாள்:
 நவம்பர் 1, திருவனந்தபுரம்
முதல் டி20:  
நவம்பர் 4, கொல்கத்தா
இரண்டாவது டி20:  
நவம்பர் 6, கான்பூர் / லக்னோ
மூன்றாவது டி20:  
நவம்பர் 11, சென்னை.

.

மூலக்கதை