தனி ஒருவன் 2 தயாரிப்பாளர் யார்?

PARIS TAMIL  PARIS TAMIL
தனி ஒருவன் 2 தயாரிப்பாளர் யார்?

  ஏ.ஜி.எஸ். தயாரிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி வெளியான படம் தனி ஒருவன். இந்தப் படம் வெளியாகி மூன்று ஆண்டுகளான நிலையில் கடந்த 28 ஆம் தேதி அன்று ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருந்தார் இயக்குநர் மோகன் ராஜா.

 
அதாவது தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாகவும், தனது அடுத்த படம் தனி ஒருவன்-2 படம் தான் என்றும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
 
மோகன் ராஜாவுடன் அவருடைய தம்பியான ஜெயம் ரவியும் இணைந்து தனி ஒருவன் - 2 படத்தில் தான் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் அந்த வீடியோ பதிவில் அறிவிப்பு செய்திருந்தார். தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்று ஏற்கெனவே சொல்லப்பட்டு வந்த நிலையில் மோகன் ராஜாவும் ஜெயம்ரவியும் அதை உறுதி செய்துள்ளனர்.
 
இரண்டாம் பாகம் படங்கள் வரிசையில் 'தனி ஒருவன்' படமும் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல, 'தனி ஒருவன்-2' படம் 'ஜெயம்' ரவி நடிக்கும் 25-ஆவது படம். மோகன் ராஜாவும் 'ஜெயம்' ரவியும் தனி ஒருவன்- 2 படத்தைப் பற்றி அறிவித்துவிட்டாலும் அப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
 

மூலக்கதை