ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா

PARIS TAMIL  PARIS TAMIL
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா

 செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘என்.ஜி.கே’. அரசியல் திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர்.

 
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு இரவு பகலாக நடந்து வருகிறது. பூந்தமல்லியில் படப்பிடிப்பை முடித்து, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இப்படம் ஆரம்பிக்கும் போதே தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
 
தற்போது தீபாவளி அன்று ரிலீஸ் இல்லை என்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதனால், சூர்யாவின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். தீபாவளி ரேசில் அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்.ஜி.கே, விஜய்யின் சர்கார் ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
 
ஆனால், விஸ்வாசம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சூர்யாவின் ‘என்.ஜி.கே’ திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக வில்லை என்று அறித்திருக்கிறார்கள். இதனால், விஜய்யின் ‘சர்கார்’ திரைப்படம் மட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை