தேசிய குண்டு எறிதல் பரமக்குடி பள்ளி மாணவி தேர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேசிய குண்டு எறிதல் பரமக்குடி பள்ளி மாணவி தேர்வு

பரமக்குடி: தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டிக்கு பரமக்குடி பள்ளி மாணவி தேர்வாகி உள்ளார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 33வது தமிழ்நாடு தடகள சாம்பியன் போட்டிகள் நடந்தது.

அதில் 32 மாவட்டங்களை சேர்ந்த 600 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 16 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவி சர்மிளா பங்கேற்றார்.

இதல் 13. 09 மீ தூரம் குண்டு எறிந்து மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கபதக்கம் பெற்றார்.

இதையடுத்து இந்த மாணவி அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

.

மூலக்கதை