வில்வித்தை போட்டியில் வெள்ளி வென்ற முஸ்கானுக்கு 75 லட்சம் பரிசு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வில்வித்தை போட்டியில் வெள்ளி வென்ற முஸ்கானுக்கு 75 லட்சம் பரிசு

ஜகார்தா: வில்வித்தை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முஸ்கான் கிராருக்கு மத்திய பிரதேச மாநில அரசு ரூ. 75 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
இந்தோனேஷியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியின் வில்வித்தையில் இந்திய அணிக்கு நேற்று 2 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன.

ஆண்கள் காம்பவுண்டு குழு பிரிவு பைனலில் ரஜத் சவுகான், அமான் சாய்னி, அபிஷேக் வர்மா ஆகியோர் அடங்கிய இந்திய அணி, தென் கொரியாவுடன் மோதியது. மிகவும் பரபரப்பாக அமைந்த இப்போட்டியின்  தென் கொரிய அணி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது.

நூலிழையில் வெற்றிவாய்ப்பை தவறவிட்டாலும், இந்திய வீரர்கள் வெள்ளிப் பதக்கம் பெற்று தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்தனர்.

முன்னதாக, மகளிர் காம்பவுண்டு குழு பிரிவிலும் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

முஸ்கான் கிரார், மதுமிதா குமாரி, ஜோதி சுரேகா வென்னம் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் தென்  கொரியாவுடன் மோதியது. இதில் தென் கொரிய அணி 231-228 என்ற புள்ளிக் கணக்கில் (57-59, 58-56, 58-58, 58-55) வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

இந்நிலையில், வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த வில்வித்தை அணியில் இடம்பெற்றிருந்த முஸ்கான் கிராருக்கு ரூ. 75 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.   

.

மூலக்கதை