800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்திய மஞ்சித் சிங்

தமிழ் முரசு  தமிழ் முரசு
800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்திய மஞ்சித் சிங்

ஜகார்தா: ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் மஞ்சித் சிங் தங்கம் வென்று அசத்தினார். ஜான்சன் ஜின்சன் வெள்ளி பதக்கம் வென்றார்.   ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தின் இறுதிப்போட்டி நடைப்பெற்றது.

இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர்கள் மஞ்சித் சிங், ஜான்சன் ஜின்சன் ஆகியோர்   தகுதிப்பெற்று இருந்தனர். எனவே, இருவரும் பதக்கம் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக தொடக்கம் முதலே சீரான வேகத்தில் மற்ற வீரர்களை முந்தி சென்றனர்.

இறுதியில் 800 மீட்டர் தூரத்தை மஞ்சித் சிங் ஒரு நிமிடம் 46. 15 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

மற்றொரு இந்திய வீரர் ஜான்சன் ஜின்சன் ஒரு நிமிடம் 46. 35 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். கத்தார் நாட்டை சேர்ந்த அப்துல்லா அபுபக்கர் ஒரு நிமிடம் 46. 38 விநாடிகளில் ஓடி வெண்கலம் வென்றார்.

800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம், வெள்ளி வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மஞ்சித் சிங், ஜான்சன் ஜின்சனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  

.

மூலக்கதை