இந்தியா ‘பி’ சாம்பியன் | ஆகஸ்ட் 29, 2018

தினமலர்  தினமலர்
இந்தியா ‘பி’ சாம்பியன் | ஆகஸ்ட் 29, 2018

பெங்களூரு: நான்கு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரில் இந்திய ‘பி’ அணி கோப்பை கைப்பற்றியது.

இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென் ஆப்ரிக்கா ‘ஏ’ என நான்கு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடந்தது. கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நடந்த பைனலில் இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதின. 

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஷார்ட் (72) அரை சதம் கடந்தார். கவாஜா (23), கேப்டன் டிராவிஸ் ஹெட் (0) ஏமாற்றினர். அலெக்ஸ் காரே (53) அரை சதம் அடித்தார். முடிவில், ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி 47.5 ஓவரில் 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட் வீழ்த்தினார்.

மணிஷ் அபாரம்

எட்டிவிடும் இலக்கை விரட்டிய இந்திய ‘பி’ அணிக்கு இஷான் கிஷான் (13) சொதப்பினார். மயங்க் அகர்வால் (69) அரை சதம் அடித்து கைகொடுத்தார். சுப்மன் கில்,  கேப்டன்  மணிஷ் பாண்டே அரை சதம் விளாச வெற்றி எளிதானது. முடிவில், இந்திய ‘பி’ அணி 36.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்து, 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுப்மன் (66), மணிஷ் பாண்டே (73) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை மணிஷ் பாண்டே பெற்றார்.

 

மூலக்கதை