தோற்றுப் போன விஸ்வரூபம் 2

PARIS TAMIL  PARIS TAMIL
தோற்றுப் போன விஸ்வரூபம் 2

 2018ம் ஆண்டில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக கமல்ஹாசன் இயக்கி நடித்த 'விஸ்வரூபம் 2' படம் இருந்தது. 2013ம் ஆண்டில் வெளிவந்த முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளிவந்த இரண்டாம் பாகம் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. எந்த விதமான பரபரப்பையும் ஏற்படுத்தாத இரண்டாம் பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி மோசமாக தோற்றுப் போனது.

 
முதல் பாகத்தில் படத்தில் சேர்க்க முடியாமல் போன காட்சிகளைத் தொகுத்து அதை ஒரு படமாக்கி ரசிகர்களை கமல்ஹாசன் ஏமாற்றியதே அந்தத் தோல்விக்குக் காரணம் என திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள். முதல் பாகம் வெளியான போது அப்போதைய அரசால் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட பரபரப்பில் அந்தப் படம் பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. ஒருவேளை அப்போது அப்படி ஒரு தடையை அந்தப் படத்திற்கு விதிக்கவில்லை என்றால் அந்தப் படமும் ஓடியிருக்காது என்று இப்போது ஒரு பேச்சு எழுந்துள்ளது. அதை நிரூபிக்கும் விதமாகத்தான் இரண்டாம் பாகமும் தோற்றுப் போய்விட்டது என்கிறார்கள்.
 
மேலும், கமல்ஹாசனின் அரசியல் குதிப்பும் படத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். எப்படியோ இந்தத் தோல்விக்குப் பதில் சொல்லும் விதமாக கமல்ஹாசன் அடுத்த படத்தைக் கொடுக்க வேண்டும் என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
 

மூலக்கதை