கேரள வெள்ளத்துக்கு உதவிய கோஹ்லி - அனுஷ்கா சர்மா..!!

PARIS TAMIL  PARIS TAMIL
கேரள வெள்ளத்துக்கு உதவிய கோஹ்லி  அனுஷ்கா சர்மா..!!

நடிகை அனுஷ்கா ஷர்மா கணவர் விராட் கோஹ்லியுடன் இணைந்து கேரளாவுக்கு உதவியுள்ளார்.
 
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர்.
 
கேரளாவை மீட்டெடுக்க பலரும் உதவி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் கோஹ்லியும், அவர் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் நிதியுதவி அளித்துள்ளனர்.
 
நிதியளித்ததோடு மட்டுமல்லாமல், கேரளாவில் உள்ள அரசு சாரா அமைப்புடன் இணைந்து கேரள மக்களின் மறுவாழ்வுக்கு உதவி வருகின்றனர்.
 
அதோடு அங்கு பாதிக்கப்பட்டுள்ள விலங்குகளுக்கு மருத்துவ உதவியும், உணவும் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
 
விலங்குகளை பாதுகாப்பது அவசியம் எனக் கூறி, ஒரு லொறியில் மருத்துவக்குழுவுடன் மருந்துப் பொருட்களையும் அனுப்பியுள்ளார்கள்.

மூலக்கதை