ரிஷப் பண்டை தகாத முறையில் பேசிய இங்கிலாந்து வீரருக்கு கிடைத்த தண்டனை!

PARIS TAMIL  PARIS TAMIL
ரிஷப் பண்டை தகாத முறையில் பேசிய இங்கிலாந்து வீரருக்கு கிடைத்த தண்டனை!

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விதி மீறிய காரணத்திற்காக, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடுக்கு ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது.
 
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 329 ஓட்டங்களில் ஆல்-அவுட் ஆனது.
 
முன்னதாக, இந்திய வீரர் ரிஷப் பண்ட் அவுட் ஆன போது இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட், அவரை நோக்கி தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பிராடுக்கு 15 சதவிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
 
இதுதொடர்பாக ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆட்டத்தின் இரண்டாவது நாளில், பிராட் வீசிய பந்தில் ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்தார். அப்போது, பிராட் அவரை நோக்கி தகாத முறையில் சத்தம் போட்டு நடந்து கொண்டதாக தெரிகிறது.
 
இது விதிமுறைகளை மீறியது. இதனால், இங்கிலாந்து வீரர் பிராடுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை