வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கராகஸ்: வெனிசுலாவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது, ரிக்டர் அளவில் 7. 3 ஆக பதிவாகியிருந்தது. வடகிழக்கு கடற்கரை பகுதியான யகுவராபரோ என்ற இடத்தில், 123 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது.அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளியில் தஞ்சம் புகுந்தனர். சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

உயிர்சேதம், பொருட்சேதம் குறித்த விவரம் வெளியாகவில்லை..

மூலக்கதை