காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது  தங்க மங்கை வினேஷ் போகத்

பதினெட்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் பெண்களுக்கான  மல்யுத்தப்போட்டியின் ஃப்ரி ஸ்டைல் 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யூகி இரி இறுதிப்போட்டியில் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த யூகியை 6-2 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார் வினேஷ் போகத். இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் தங்கம் வென்ற முதல் மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

வெற்றிக்குப் பிறகு வினேஷ் போகத் பேசுகையில், தங்கம் வெல்வதை எனது இலக்காகக் கொண்டிருந்தேன். நான் ஆசிய அளவில் ஏற்கனவே வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளேன். அதனால் இன்று தங்கம் வென்றாக வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டேன். எனது உடலும் அதற்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தது. நான் நன்றாகப் பயிற்சி பெற்றிருந்தேன். கடவுளும் எனக்கு கருணை காட்டினார். காயங்கள் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாகும். அது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கடினமான ஒன்று. விளையாட்டு வீரர்கள் காயங்களுக்குப் பின்னர்தான் வலுவாகக் காணப்படுகிறார்கள் எனச் சிலர் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை உண்மை எனத் தற்போது நினைக்கிறேன் என உருக்கமாக கூறினார்".

வினேஷ் போகத் ரியோ ஒலிம்பிக்கில் காயத்தால் வெளியேறினாலும், தற்போது தங்கம் வென்று சாதனை படைத்திருப்பது, இந்திய விளையாட்டு வீராங்களைகள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை