அமெரிக்க பொருட்களுக்கு சீனா புதிய வரிகள் : படுகுழியில் தள்ளிவிடுவதாக வர்த்தக நிறுவங்கள் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
அமெரிக்க பொருட்களுக்கு சீனா புதிய வரிகள் : படுகுழியில் தள்ளிவிடுவதாக வர்த்தக நிறுவங்கள் எச்சரிக்கை

அமெரிக்க: புதிதாக விதிக்கப்பட்டுள்ள 200 மில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதி வரி அமெரிக்க வர்த்தகத்தை படுகுழியில் தள்ளிவிடும் என்று அந்நாட்டு வர்த்தக நிறுவங்கள் தெரிவித்துள்ளது. வர்த்தக போரின் விளைவாக இரு நாட்டு அரசுகளும் பல்வேறு இறக்குமதி பொருட்களுக்கு பரஸ்பர வரிவிதிப்பு விகிதத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தற்போது சீனா விதித்துள்ள 200 மில்லியன் டாலர் மதிப்பிலான வரியால் அமெரிக்க கடல் உணவுகள், மரப்பொருட்கள், டயர்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சைக்கிள்கள்  உள்ளிட்டவற்றின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. சீனா விதித்துள்ள வரியை செலுத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்படும் என்பதால் அமெரிக்க வர்த்தகம் தொட்டிலிலிருந்து சவக்குழிக்கு தள்ளப்படும் என்று வர்த்தக நிறுவங்கள் எச்சரித்துள்ளனர்.

மூலக்கதை