5 விக்கெட் எடுத்து அசத்தினார் ஹர்திக் பாண்டியா: அடுத்தடுத்த அவுட்களால் சுருண்டது இங்கிலாந்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
5 விக்கெட் எடுத்து அசத்தினார் ஹர்திக் பாண்டியா: அடுத்தடுத்த அவுட்களால் சுருண்டது இங்கிலாந்து

நாட்டிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின்  இரண்டாம் நாளில், இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாட்டிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கிய டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள் குவித்து இருந்தது.

இந்த நிலையில், தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி இந்திய வீரர்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 161 ரன்களில் சுருண்டது. ஹர்திக் பாண்டியா 6 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உடன் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

இதன்மூலம் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். ஐந்து விக்கெட்டும் சாதாரணமான விக்கெட் அல்ல.

ஜோ ரூட் (16), பேர்ஸ்டோவ் (15), கிறிஸ் வோக்ஸ் (8), அடில் ரஷித் (8), ஸ்டூவர்ட் பிராட் (0) ஆகிய விக்கெட் ஆகும். அதேபோல் இந்த டெஸ்டில் அறிமுகமான விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அபாரமாக செயல்பட்டார்.



பறந்தது பறந்தும், டைவ் அடித்தும் கேட்ச் பிடித்தார். அவர் ஐந்து கேட்ச் பிடித்து அசத்தினார்.

இதனால் அறிமுக போட்டியிலேயே ஐந்து கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். இங்கிலாந்து அணியை திணறடித்த ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்டிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக கடந்த போட்டிகளில் கடுமையாக சொதப்பியதன் மூலம் இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்த ஹர்திக் பாண்டியா, இந்த ஒரே போட்டியின் மூலம் இந்திய ரசிகர்களின் பாராட்டை மீண்டும் பெற்றுள்ளார்.

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவான் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

புஜாரா 33 ரன்களுடனும், கோலி 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.   இந்த நிலையில் இந்திய அணிக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்த நிலையில் உள்ளது.

.

மூலக்கதை