ஆஃப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 100 பேர் கடத்தல் : தாலிபன் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்

தினகரன்  தினகரன்
ஆஃப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 100 பேர் கடத்தல் : தாலிபன் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்

ஆஃப்கானிஸ்தான்: தாலிபன் தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்கள் சுமார் 100 பேரை கடத்திச் சென்றுள்ளதாக ஆஃப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இஸ்லாமிய தியாகத் திருநாளான ஈத் அல் ஆதாவை முன்னிட்டு ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி தாலிபன்களுடன் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.இந்நிலையில் கான் அபாத் நகர் அருகே 3 பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டு, அதில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 100 பேரை கடத்திச் சென்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு தாலிபன் தீவிரவாதிகள் பொறுப்பேற்கவில்லை என்றாலும் இந்தப் பகுதி தாலிபன்களின் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் அவர்கள் கடத்திச் சென்றிருக்கக் கூடும் என்று அறியப்படுகிறது.

மூலக்கதை