ஜப்பானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு சென்றது இந்திய மகளிர் கபடி அணி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜப்பானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு சென்றது இந்திய மகளிர் கபடி அணி

ஜகார்தா: ஜப்பானை 43-12 என வீழ்த்தியதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய பெண்கள் கபடி அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. பெண்கள் கபடிப் போட்டியின் குரூப் ஏ பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் இந்தியா, ஜப்பான் மோதியது.

துவக்கம் முதல் முன்னிலையில் இருந்த இந்திய பெண்கள் அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 19-8 என முன்னிலையில் இருந்தது. முதல் பாதியில் ஜப்பான் அணியை ஒரு முறை ஆல்-அவுட் செய்து அசத்தியது இந்திய அணி.

ஜப்பான் அணி எந்த சந்தர்ப்பத்திலும் இந்திய அணியின் புள்ளிகளின் அருகில் வர முடியவில்லை. தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் மிகச் சிறந்த ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் ஜப்பான் தடுமாறியது.

இந்தியா புள்ளிகள் எடுப்பதை தடுக்க ஜப்பான் அணி தடுப்பு அமைத்தது.

இருந்தாலும் அதை  இந்திய அணியின் ரைடர்கள்  உடைத்து முன்னேறினர்.

ஜப்பான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அந்த அணியின் ரைடர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 43-12 என பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய பெண்கள் கபடி அணி கடந்த  ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றது.

அதே போல இந்த முறையும் தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை