கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...

கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து  பெய்துவரும் கனமழையால் 12 மாவட்டங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது, மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு  உச்சக்கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது, இதுவரை  மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி  357 ஆக உயர்ந்துள்ளது.

நூற்றுக்கணக்கான மக்கள் இதுவரை மாயமாகியுள்ளனர், அவர்களின் நிலை என்னவானது என்பது குறித்த தகவல் இல்லை. முதியவர்களும், குழந்தைகளும் உணவு, தண்ணீர், மருந்துகள் இன்றி தவிக்கின்றனர்.

கேரளாவில் உள்ள  கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட வடமாவட்டங்களில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று மற்றும்  மழையும் பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில், 'கடந்த 10 நாட்களாகப் பெய்து வரும் மழைக்கு இதுவரை 324 பேர் பலியாகி உள்ளனர். 80 அணைகள் நிரம்பி திறந்துவிடப்பட்டுள்ளன.

2 லட்சத்து 23 ஆயிரத்து 139 பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தங்குவதற்காக 1,500 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு தாராளமாக உதவி செய்யுங்கள். முதல்வர் நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்பி உதவலாம்' என தெரிவித்துள்ளார்.

முதல்வர் நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்ப:

Chief Ministers Distress Relief Fund, (CMDRF) accepts voluntary contributions from Individuals, Organizations, Trusts, Companies and Institutions etc. All contributions towards CMDRF are exempt from Income Tax under section 80(G).

Donations now accepted through UPI mobile app like BHIM, paytm, Tez, Phonepe also.(VPA : keralacmdrf@sbi) / Scan the QR Code to donate.

For Bank Counter Payment:

Beneficiary Name : Principal Secretary (Fin), Treasurer CMDRF
Bank Name : State Bank of India (SBI)
Account Number : 67319948232
Branch : City Branch, Thiruvananthapuram
IFSC : SBIN0070028

For offline Contribution:

Cheque/Demand Draft can be drawn in the favour of Principal Secretary (Finance), Treasurer CMDRF, payable at Thiruvananthapuram. The same may be posted/mailed to the following address:

Principal Secretary (Finance),
Treasurer CMDRF,
Secretariat,
Thiruvananthapuram – 695 001
Kerala, INDIA.

மூலக்கதை