பள்ளியில் குண்டுவெடிப்பு - 48 மாணவர்கள் உடல் சிதறி பலி!

PARIS TAMIL  PARIS TAMIL
பள்ளியில் குண்டுவெடிப்பு  48 மாணவர்கள் உடல் சிதறி பலி!

ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளியில் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 48 பள்ளி மாணவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

 
ஆப்கானிஸ்தானில் தாஷ்த்-இ-பார்ச்சி என்ற இடத்தில் பள்ளி ஒன்று இயங்கிக் கொண்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று மாணவர்கள் பள்ளியில் பாடம் படித்துக் கொண்டிருந்தனர்.
 
அப்போது திடீரென பள்ளிக்குள் புகுந்த தற்கொலைப்படையினர், நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 48 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

மூலக்கதை