கோழிக்கோடு, ஆழப்புழா உள்ளிட்ட இடங்களில் வெள்ளத்தில் சிக்கிய 926 பேரை மீட்ட தேசிய பேரிடர் மீட்பு குழு

தினகரன்  தினகரன்
கோழிக்கோடு, ஆழப்புழா உள்ளிட்ட இடங்களில் வெள்ளத்தில் சிக்கிய 926 பேரை மீட்ட தேசிய பேரிடர் மீட்பு குழு

திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய 926 பேரை தேசிய பேரிடர் மீட்பு குழு மீட்டுள்ளனர். பத்தனம்திட்டா, கோழிக்கோடு, திருச்சூர், ஆழப்புழா ஆகிய இடங்களில் வெள்ளத்தில் தவித்தவர்களை தேசிய பேரிடர் மீட்பு குழு பத்திரமாக மீட்டனர். கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தாண்டவம் ஆடிவரும் பேய் மழையின் தீவிரம் இன்னும் குறையவில்லை. திருவனந்தபுரம், இடுக்கி, வயநாடு, கண்ணூர் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலை தொடங்கி கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. நேற்றும் மழை தீவிரமாக பெய்தது. தொடர் மழையால் மொத்தமுள்ள 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பம்பை, பெரியாறு, வாமனபுரம் உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றன. கனமழையை தொடர்ந்து திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான 14 மாவட்டங்களுக்கும் அடுத்த 3 நாட்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பலான வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வெள்ளத்தில் தவித்த 926 பேரை தேசிய பேரிடர் மீட்பு குழு மீட்டுள்ளது.

மூலக்கதை