இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறந்த கேப்டன் தோனிதான்: உத்தப்பா உருக்கம்; ஆசிஸ் நெஹ்ரா அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறந்த கேப்டன் தோனிதான்: உத்தப்பா உருக்கம்; ஆசிஸ் நெஹ்ரா அதிரடி

மும்பை: ராபின் உத்தப்பாவிடம்  நிருபர் ஒருவர், இந்திய அணி கேப்டனில்  சிறந்தவர் கங்குலியா, தோனியா என கேள்வி எழுப்பியதற்கு தோனிதான்  சிறந்த கேப்டன் என்று தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான ராபின் உத்தப்பா கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு கடந்த மூன்று வருடங்களாகவே இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்று ராபின் உத்தப்பாவிடம்  இந்திய கிரிக்கெட் அணியில்  தோனி மற்றும் கங்குலி என இருவரில் யார் சிறந்த கேப்டன் என்ற கேள்வி கேட்டக்கப்பட்டது. இந்த கேள்விக்கு சற்றும் யோசிக்காத ராபின் உத்தப்பா, தோனியே சிறந்த கேப்டன் என தெரிவித்துள்ளார்.

உத்தப்பாவை போலவே இந்திய அணியின் மற்றொரு சீனியர் வீரரான ஆசிஸ் நெஹ்ராவும் தோனியே சிறந்த கேப்டன் என்று தெரிவித்துள்ளார்.

ஆங்கில இதழ் ஒன்றுக்கு ஆசிஷ் நெஹ்ரா எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது:  தோனியை 2005ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது சந்தித்தேன். அதன்பிற்கு காயம் காரணமாக நான் அணியில் இல்லை.

பின்னர் 2009ல் தான் தோனியுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு நிறைய போட்டிகளில் தோனியுடன் ஆடினேன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் அவரது தலைமையின் கீழ் ஆடியுள்ளேன். கேப்டனாக பொறுப்பேற்றதும் 2007ம் ஆண்டில் டி20 உலக கோப்பையை தோனி கைப்பற்றினார்.

நெருக்கடியான சூழலை எப்படி கையாள வேண்டும் என்பது தோனிக்கு நன்றாக தெரியும்.

இக்கட்டான நிலைகளில் டென்ஷனாகாமல் கூலாக ஆடி, தனக்கே உரிய பாணியில் போட்டியை வெற்றிகரமாக முடித்துவைப்பவர் தோனி.

அதுமட்டுமல்லாமல் அணி வீரர்களிடமிருந்து அவர்களது பெஸ்ட் ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவதிலும் தோனி வல்லவர். இவ்வாறு தோனியை நெஹ்ரா புகழ்ந்துள்ளார்.


இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர்களில் கபில் தேவ், கங்குலி, தோனி ஆகியோர் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அணியை வளர்த்தெடுத்துள்ளனர். தோனியின் காலகட்டத்தில்  இந்திய அணி, மூன்று விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்றது.

அவரது தலைமையின்கீழ் இந்திய அணி படைத்த சாதனைகளும் அடைந்த வளர்ச்சியும் கிரிக்கெட் வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும் என்றும் கூறியுள்ளார்.




.

மூலக்கதை