தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு: சிலைக்கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்

தினகரன்  தினகரன்
தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு: சிலைக்கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்

டெல்லி: சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிலை கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தடை பெற்ற வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் முன் முறையீடு எனப்படும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். சிபிஐ விசாரிக்க தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தன் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். அண்மையில் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து ராஜ ராஜசோழன் மற்றும் லோகம்மாள் தேவி சிலையை மீட்டு கொண்டு வந்த குழுவில் இடப்பெற்றவர் யானை ராஜேந்திரன். சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு குழுவை அமைத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில்  சிலை  கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு திடீரென அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடைவிதித்தது. இது தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால் யானை ராஜேந்திரன்  கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

மூலக்கதை