பாக். பார்லி. சபாநாயகர் தேர்தலில் இம்ரான்கான் கட்சி வேட்பாளர் வெற்றி

தினமலர்  தினமலர்
பாக். பார்லி. சபாநாயகர் தேர்தலில் இம்ரான்கான் கட்சி வேட்பாளர் வெற்றி

இஸ்லாமாபாத்:பாக். பார்லி. சபாநாயகராக இம்ரான் கட்சி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் பார்லி.க்கு நடந்த பொது தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பாக்.பிரதமராக இம்ரான்கான் பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் பார்லி. கூட்டம் கடந்த 13-ம் தேதி கூடியது. இதில் புதிய எம்.பி., க்கள் பதவி ஏற்றனர். இதனைதொடர்ந்து 15-ம் தேதி (புதன்கிழமை) சபாநாயகர் தேர்தல் நடந்தது. இதில் இம்ரான்கானின் தெக்ரீக் இ-இன்சாப் கட்சி, மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசாத் கைசர் வெற்றி பெற்றார். அவருக்கு 176 ஓட்டுகள் கிடைத்தன. புதிய சபாநாயகருக்கு இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்தார். அன்றே ஆசாத் கைசர் புதிய சபாநாயகராக பதவி ஏற்றார்.

மூலக்கதை