நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கேரி ஸ்டெட் நியமனம்

தினகரன்  தினகரன்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கேரி ஸ்டெட் நியமனம்

வெலிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கேரி ஸ்டெட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மைக் ஹெஸ்சன் கடந்த ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து தற்போது நியூசிலாந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த இரண்டு வருடத்திற்கு இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கேரி ஸ்டெட் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. க்டோபர் மாதம் இறுதியில் நியூசிலாந்து அணி, ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதில் இருந்து கேரி ஸ்டீட்டின் பயிற்சியாளர் பணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை