முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் மரணம்

தினகரன்  தினகரன்
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் மரணம்

மும்பை: முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் லக்ஸ்மண் வடேகர் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 77. மும்பையில் கடந்த 1941ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பிறந்த இவர் 1966ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் முதல் முதலாக விளையாடினார்.  1976ம் ஆண்டு வரை 37  டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய  2,113 ரன்களை எடுத்தார். இடதுகை ஆட்டக்காரான வடேகர் 1971ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்தார். இவரது தலைமையில்தான் வெளிநாட்டில் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஒரு  நாள் கிரிக்கெட் போட்டியின் முதல் கேப்டனாகவும் இருந்த  வடேகருக்கு, பத்ம, அர்ஜூனா உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. 1990ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகியாகவும், வீரர்கள் தேர்வு குழுவிலும் இடம்  பெற்றார்.  நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.  இவருக்கு ரேகா என்ற மனைவியும், இரு மகன்களும், ஒரு மகளும்  உள்ளனர்.

மூலக்கதை