ட்வீட் கார்னர்... எல்லோரும் நம்பர் 1 தான்!

தினகரன்  தினகரன்
ட்வீட் கார்னர்... எல்லோரும் நம்பர் 1 தான்!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ராப் இசைக்கலைஞர் கேனி வெஸ்ட், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘யாரும் யாரையும் விட சிறந்தவர் இல்லை’ என்று ஒரு தகவலைப் பதிந்திருந்தார். ரசிகர்களிடம் இந்த ட்வீட் வைரலாகப் பரவியதை அடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நகைச்சுவையாக சிறிது நேரத்துக்கு தனது டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பக்கத்தில் அனைத்து வீரர்களுக்கும் முதலிடம் வழங்கி அதை ட்வீட் செய்தது. ஐசிசி அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அத்தனை பேருக்கும் நம்பர் 1 அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கும் படமும் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

மூலக்கதை