யாரும் செத்துவிட மாட்டார்கள்...... அடுத்தடுத்த நாள் போட்டிகளில் விளையாடுவது பற்றி டீன் ஜோன்ஸ் கருத்து

தினகரன்  தினகரன்
யாரும் செத்துவிட மாட்டார்கள்...... அடுத்தடுத்த நாள் போட்டிகளில் விளையாடுவது பற்றி டீன் ஜோன்ஸ் கருத்து

லண்டன்: அடுத்தடுத்த நாள் போட்டியில் விளையாடுவதால் வீரர்கள் யாரும் செத்துவிட மாட்டார்கள் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 18ம் தேதி தகுதிச்சுற்றிலிருந்து தகுதி பெறும் அணியுடன் விளையாட உள்ள இந்திய அணி, அடுத்த நாளே பாகிஸ்தானுடன் மோதுகிறது. இப்படி அட்டவணை போட்டால் பாகிஸ்தானுடன் இந்தியா வெற்றி பெறக் கூடாது என்பதற்காக போடுகிறீர்களா, உடனே அட்டவணையை மாற்றுங்கள் என்று ஆசியக் கோப்பை போட்டி அட்டவணை வெளியான உடனே அதிரடி வீரர் சேவாக் காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியதாவது: நாங்கள் விளையாடும்போது அடுத்தடுத்த நாட்களில் நிறைய ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கிறோம். இப்போது ஏன் வீரர்கள் புகார் கூறுகின்றனர் என புரியவில்லை?, டெஸ்ட் போட்டியில் 5 நாட்கள் தொடர்ந்து கிரிக்கெட் ஆடுவதில்லையா?. இங்கிலாந்தில் ஒரு முறை நாங்கள் 11 நாட்கள் தொடர்ச்சியாக 3 முறை ஆடியிருக்கிறோம்.இதனால் இந்தியா தொடர்ந்து அடுத்தடுத்த நாளில் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடுவதில் நான் எந்தப் பிரச்சினையையும் பார்க்கவில்லை. களைப்பு ஒரு பிரச்சினை இருக்காது, ஏனெனில் இப்போது ஆடுபவர்களெல்லாம் தடகள வீரர்கள் போன்றவர்கள், நம்ப முடியாத அளவுக்கு உடற்தகுதி வைத்திருக்கின்றனர். ஆகவே அவர்களுக்கு ஒன்றும் ஆகாது, யாரும் செத்துவிடமாட்டார்கள். இவ்வாறு டீன் ஜோன்ஸ் கூறியுள்ளார். 

மூலக்கதை