ரஷ்யாவின் பென்ஸா உயிரினப் பூங்காவில் காப்பாளரை மிதித்து துவைத்த நெருப்புக் கோழி

தினகரன்  தினகரன்
ரஷ்யாவின் பென்ஸா உயிரினப் பூங்காவில் காப்பாளரை மிதித்து துவைத்த நெருப்புக் கோழி

ரஷ்யா: ரஷ்யாவில் வரிக்குதிரையின் கூண்டுக்குள் நுழைந்த உயிரினக் காப்பாளரை நெருப்புக் கோழி சரமாரியாக மிதித்து துவைத்தது. பென்ஸா உயிரினப் பூங்காவில் வரிக்குதிரையும், நெருப்புக் கோழியும் ஒன்றாக அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் வரிக்குதிரையை இடமாற்றம் செய்ய விரும்பிய விலங்கியல் ஊழியர் ஒருவர் அந்த கூண்டுக்குள் இறங்கினார். இதை பார்த்து ஆவேசம் அடைந்த நெருப்புக் கோழி ஊழியரைக் கீழே தள்ளி தனது கால்களால் பந்தாடியது. பலமுறை அவர் எழுந்திருக்க முயன்றும் சரமாரியாக அவரை மிதித்து துவைத்தது. இறுதியில் பலத்த போராட்டத்துக்கு மின் அவர் தன்னை தற்காத்துக் கொண்டார்.

மூலக்கதை