இங்கிலாந்தில் சூழல் காற்றுடன் எரிந்த பிளாஸ்டிக் தொழிற்சாலை

தினகரன்  தினகரன்
இங்கிலாந்தில் சூழல் காற்றுடன் எரிந்த பிளாஸ்டிக் தொழிற்சாலை

இங்கிலாந்து: இங்கிலாந்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து வீசிய நெருப்பு சூறாவளி பார்ப்பவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தெற்கு டெர்பிஷையர் என்ற இடத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீப்படித்து விபத்து ஏற்பட்டது. இதில் பிளாஸ்டிக் பொருட்கள் உறுகி ஆறாக பெருக்கெடுத்து ஓடின. அதன் மீதும் தீ எரிந்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக சூழல் காற்று வீசியது. அதில் சிக்கிய தீ சுவாலை சுமார் 50 அடி உயரத்திற்கு எழுந்தது. இதனை அருகில் இருந்து பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உரைந்து போகினர். 

மூலக்கதை