திமுக செயற்குழு கூட்டம் துவங்கியது

தினமலர்  தினமலர்
திமுக செயற்குழு கூட்டம் துவங்கியது

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவும், அழகிரியால் எழுந்துள்ள சர்ச்சை குறித்து விவாதிக்கவும், தி.மு.க., செயற்குழு கூட்டம், சென்னையில், இன்று கூடுகிறது.
சென்னை, அறிவாலயத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கவுள்ள, இந்தக் கூட்டத்திற்கு செயல் தலைவர், ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள் என, 750 பேர் பங்கேற்க உள்ளனர்.முதலில், கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், நிர்வாகிகள் பேசுவர். அடுத்த தலைவராக ஸ்டாலினை, பொதுக்குழுவில் தேர்வு செய்து குறித்தும் விவாதிக்கப்படுகிறது.\முக்கியமாக, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை, கட்சியில் சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்தும், அவரால் எழுந்துள்ள சர்ச்சை பற்றியும் விவாதிக்கப்படும் என, தெரிகிறது.

மூலக்கதை