டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் நம்பர்-1 இடத்தை இழந்த கோஹ்லி

தினகரன்  தினகரன்
டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் நம்பர்1 இடத்தை இழந்த கோஹ்லி

புதுடெல்லி: ஐசிசி டெஸ்ட் ரேங்கிங் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் விராட் கோஹ்லி நம்பர்-1 இடத்தை பறிகொடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் ரேங்கிங் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி நம்பர்-1 இடத்தை பறிகொடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டின் இரு இன்னிங்சில் கோஹ்லி 23, 17 ரன் மட்டுமே எடுத்தார். இதனால், 919 புள்ளிகளுடன் ஒரு இடம் பின்தங்கி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டால் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளார். ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் அஷ்வின் 374 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா 849 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், அஷ்வின் 802 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் நீடிக்கின்றனர். இங்கிலாந்தின் ஆண்டர்சன் 903 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.பேட்டிங் டாப்-5ரேங்க்    வீரர்                                         புள்ளி1.    ஸ்மித் (ஆஸ்திரேலியா)              9292.    கோஹ்லி (இந்தியா)                      9193.    ஜோ ரூட் (இங்கிலாந்து)               8514.    வில்லியம்சன் (நியூசிலாந்து)    8475.    வார்னர் (ஆஸ்திரேலியா)            820

மூலக்கதை