தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு தீர்ப்பு பற்றி வழக்கறிஞர் விளக்கம்

தினகரன்  தினகரன்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு தீர்ப்பு பற்றி வழக்கறிஞர் விளக்கம்

தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 10 பொது நல வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. துப்பாக்கி சூடு வழக்கு தீர்ப்பு பற்றி வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார். துணை தாசில்தார் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை என்றும் போலீஸ் தவறான நடைமுறைகளை பின்பற்றி உள்ளது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்ததாக வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடியவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. மே 22ம் தேதி போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

மூலக்கதை