கலைஞரை பார்க்க வராத தமிழக மக்கள் மீது ரஜினி கோபம்

FILMI STREET  FILMI STREET
கலைஞரை பார்க்க வராத தமிழக மக்கள் மீது ரஜினி கோபம்

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு தமிழ் திரையுலகினர் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் ரஜினிகாந்த் பேசும்போது….

தமிழ் சினிமாவில் கலைஞரின் பயணம் பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை.

தமிழகத்தின் இரண்டு பெரிய இமயங்களை உருவாக்கியவர் கலைஞர். நடிகராக இருந்த எம்.ஜி.ஆரை ஸ்டாராக்கியது மலைக்கள்ளன் படத்தில், சிவாஜி கணேசனை ஒரே படத்தில் சூப்பர் ஸ்டார் ஆக்கியதும் கலைஞர் தான்.

கலைஞர் மறைந்தார் என்ற செய்தி கேட்டவுடனே என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவருடன் நான் கழித்த நேரங்கள் என் நினைவில் வந்துகொண்டே இருந்தது. டிவியில் பார்த்தேன் மக்கள் கூட்டம், இருந்தாலும் பரவாயில்லை என்று சென்றேன்.

ஆனால் என்னால் பார்க்கமுடியாமல் திரும்பி வந்துவிட்டேன். மீண்டும் அதிகாலையிலேயே காலையில் சென்றேன்.

பல ஆயிரம் கூட்டங்கள் மட்டுமே இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். எங்கே அவரது உடன் பிறப்புகள், அவர்களுக்காக எவ்ளோ உழைத்திருக்கிறார்.

தமிழக மக்கள் மீது கோபம் வந்தது. ஆனால் அதன் பிறகு அலை அலையாய் கட்டுகடங்காத கூட்டத்தைப் பார்த்து வியந்தேன். தமிழக மக்கள் என்றுமே நன்றி மறவாதவர்கள்.” என உருக்கமாக பேசினார்.

Rajini angry on Tamilnadu Peoples for less crowd at Karunanidhi funeral

 

மூலக்கதை