புலி முருகனை ஓவர்டேக் செய்த மதுர ராஜா

தினமலர்  தினமலர்
புலி முருகனை ஓவர்டேக் செய்த மதுர ராஜா

மம்முட்டி நடிக்கும் படங்களிலேயே மிகவும் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் மதுர ராஜா. இத்தனைக்கும் மம்முட்டி குஞ்சாலி மரைக்கார் என்கிற வரலாற்றுப்படத்தில் நடித்தாலும் கூட, கமர்ஷியல் படமான மதுரா ராஜாவுக்குத்தான் பட்ஜெட் அதிகமாம். மம்முட்டியை வைத்து போக்கிரி ராஜா படத்தை இயக்கிய இயக்குனர் வைசாக் அதன் இரண்டாம் பாகமாக இந்தப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பபில் வரும் ஆக-18 முதல் மம்முட்டி கலந்துகொள்ள இருக்கிறார். இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படாத நிலையில் இந்தப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை ஜீ மலையாளம் சேனல் மிகப்பெரிய விலைக்கு கைப்பற்றியுள்ளதாம். இது புலி முருகன் படத்திற்கு கிடைத்த விலையை விட அதிகம் என்கிறார்கள். புலி முருகனை இயக்கிய அதே வைசாக் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார் என்பதுதான் இதில் ஹைலைட்டே.

மூலக்கதை